இந்தத் தேர்தலில் ... என்ன செய்யப்போகிறோம்? ...

தேர்தலைப் பற்றி தெளிவாக ஒரு முடிவில் இருப்பவர்களை பற்றி எனக்கு ஒரு கவலையும் இல்லை.. முடிவு எதுவாயிருப்பினும் .. காங்கிரஸ், பாஜக அல்லது மூன்றாவது அணி ஏதேனும் ஒரு தெளிவான முடிவு உங்களிடம் இருந்தால் போதும் .. நீங்கள் எனது நண்பராய் இருந்தாலும் எதிரியை இருந்தாலும் களத்தில் சந்திக்கத் தயார். ஆனால் களத்திற்கே வரமாட்டேன் என அடம் பிடிக்கும் நண்பர்களிடம் தான் விவாதிக்க விரும்புகிறேன்.

தேர்தல் களத்தில் அரங்கேரவிருக்கும் மையமான கொள்கை சார்ந்த சண்டைகளை விடுத்து சினிமா நடிகர்களின் போலி கவர்ச்சியை நம்பிக்கொண்டிருப்பவர்கள், "49 ஓ" மூலமாக வாக்கை வீணடித்தால், அதன் மூலம் அரசியல்வாதிகளை தண்டித்துவிடலாம் என்று நினைத்துக் கொண்டிருப்பவர்கள். சாதி மற்றும் மதம் சார்ந்த குறுகிய அரசியலின் பக்கம் ஓரங்கட்ட துடிப்பவர்கள் ஆகியோரிடம் தான் நான் பேச விரும்புகிறேன்.

முதல் இரண்டு வகையைச் சார்ந்தவர்கள் தற்போதைய அரசியலின் மீது கோபம் கொண்டவர்கள். மாற்றம் வேண்டுமென்று துடிப்பார்கள், ஆனால் அது எத்தகைய மாற்றம் என்று கேட்டால் சரியாகச் சொல்லத் தெரியாது. எனவே யாரேனும் கவர்ச்சிகரமான வார்த்தைகளை வீசி "மாற்றம்" குறித்து பேசினால், அந்த மகுடிக்கு மயங்கிவிடுவார்கள் அல்லது யாருமே சரியில்லை என்று கூறி விரக்தியடைவார்கள்.

இந்தியாவில் வரவிருக்கும் தேர்தலில் முன் வைத்திருக்கிற கேள்வி என்ன தெரியுமா? - காங்கிரஸ் பாஜக ஆகிய கட்சிகளின் பொருளாதாரக் கொள்கைகளுக்கு, மலிவான அரசியலுக்கு மாற்றாக, அனைத்து மாநில மக்களையும் முறையாக பிரதிநித்துவ படுத்துகிற ஒரு கூட்டாட்சியை நோக்கி தேசத்தை இழுத்துச் செல்வதுதான். வரலாற்று ரீதியாக மாநில கட்சிகள் மக்களிடம் நம்பிக்கை பெற்று வரும் காலமிது. ஆக இந்தத் தேர்தலில் உருவாகியிருக்கும் மூன்றாவது அணி அதிகாரக் குவியலை எதிர்த்து, ஜனநாயகத்தை வலுப்படுத்துவதற்கான முதற்க் கட்ட முன்னேற்றம் ...

அந்த வகையில் முதல் வகையினருக்கு நான் சொல்ல விரும்புவது ...
அரசியல் என்பது தனி நபர் சார்ந்ததில்லை .. கோடிக்கணக்கான ஏழை, நடுத்தர, பணக்கார மக்களுக்கு தங்கள் "வாக்கின்" வலிமை, புரிந்திருக்கிறது. எனவே அரசியல் என்பது மக்கள் சார்ந்தது .. ஆனால் நடைமுறையில் தனி நபர்களை சார்ந்தது போல ஒரு தோற்றம் இருக்கிறது. அந்தத் தோற்றத்திற்கு இரையாகிவிடாதீர்கள்
.
தேசிய அளவிலான மாற்றத்தை சாதிக்க உதவாமல் உங்களின் ஒட்டு வீணான ஓட்டாக மாறிவிடும்.

ஒரு தனி நபர் இந்த சமுதாயத்தில் எந்த ஒரு மாற்றத்தையும் சாதித்துவிடவில்லை, எல்லா மாற்றங்களை சாதிக்கவும் ஒரு கூட்டு சக்தி தேவைப்படும் போது ... ஒரு தனி மனிதரால் எந்த அதிசயத்தையும் நிகழ்த்திவிட முடியாது .. ஒரு வேலை அப்படி ஒருவர் உருவானால் அவரின் தோற்றம் "பகத் சிங்கைப்போல, சுபாஸ் சந்திரபோசை போல, பெரியாரைப் போல .. வாழ்க்கையால் வடித்தெடுக்கப் பட்டதாக இருக்கும். அல்லாது வெறும் பிதர்ரளைக் கக்குகிற குழப்பமாக இருக்காது. 

மாற்றம் என்று ஒன்றிருந்தால் கண்டிப்பாக அதற்க்கு திட்டம் என்று ஒன்று இருக்கும். திட்டம் இல்லாத மாற்றங்களின் பின்னால் உங்களின் நாட்களை வீணடிக்காதீர்கள்.

49 ௦௦ஓ போடுபவர்களுக்கு:

"ஓ" போடுவது வேண்டுமானால் ஜாலிக்காக இருக்கலாம் ஆனால் 49 ௦௦ஓ போடுவது அப்படிப்பட்ட விசயமல்ல. நீங்கள் உங்கள் வாக்கை "கள்ள" ஓட்டாக மாறாமல் காப்பாற்ற இந்த வழியைக் கையாளலாம். சரிதான் .. அனால் உங்களின் தொகுதியில் ஒரு நல்லவர் கூட வேட்பாளராக உருவாகாத நிலையில்.. உங்களை நீங்கள் பரிசீலனை செய்துகொள்ள வேண்டாமா? 

மோசமான வேட்பாளர்கள் அரசியலில் நிற்பதும், அவர்கள் ஒரு கேவலமான அரசியல் நடத்துவதும் அரசியல் கட்சிகளின் தவறா? அல்லது அரசியலில் நல்லவர்கள் வளர விடாத நமது சமுதாயத்தின் தவறா?. அரசியல் நமது வாழ்வின் ஒவ்வொரு நிமிடத்திலும் பங்கு கொள்கிறது எனும் நிலையில். அரசியலை விட்டு நாம் ஒதுங்கும் தவறைச் செய்த காரணத்தாலேயே இவ்வாறு நடந்திருக்கிறது. 49 ௦௦ஓ போட நினைப்பவர்கள் இப்போதே தீர்மானமான ஒரு முடிவை எடுத்துக் கொள்ளுங்கள். 

அரசியலில் நல்லவர்கள் உருவாகாத நிலையில், நானோ, எனது குடும்பத்தினரோ அல்லது நண்பர்களில் ஒருவரோ நல்ல அரசியலை நடத்த நினைத்தால் அவர்களுக்கு உதவுவேன். 

இருக்கும் கொள்கைகளில் சிறந்த ஒன்றை தேர்ந்தெடுத்து வாழ்வின் ஒரு பகுதியை அதனை வலுப்படுத்த செயல்படுவேன்.

நண்பர்களே ஒட்டு மொத்த சமுதாயத்தின் மாற்றம் என்பது அரசியலால் மட்டுமே சாத்தியம் எனவே அதனை தீர்மானிக்கிற இடத்தில் நம் ஒவ்வொருவரின் பங்களிப்பும் மிக அவசியம். எனவே அதனை உருவாக்கிக் கொள்ளுங்கள். முடிந்தவரை உங்களின் வாக்கை வீணடிப்பதை தவிருங்கள்.


சாதி அரசியல்:
நான் இருக்கும் திருப்பூரில் சாதி அரசியல் புதிதாக மேலெழுந்து வருவதைக் காணமுடிகிறது. விவசாயம் காப்பேன், சாயத் தொழில் காப்பேன் .. என்று சொல்லிக் கொண்டு .. உண்மையில் அருந்ததிய மக்களுக்கு எதிரான சாதி ஆதிக்க வெறியை கிளப்பி அதன் மூலம் ஒரு அரசியல் சக்தியாக உருவாக விரும்புகிறார்கள் அவர்கள். பொதுவாக அவர்கள் அதிகம் பணம் செலவு செய்வதாலும், பிரம்மாண்டமாக தன்னைக் காட்டிக் கொள்வதாலும் அவர்களிடம் ஒரு மாற்றம் கிடைக்குமோ என்று கருதி நல்ல நண்பர்கள் பலரும் ஒரு குழப்பத்தில் ஆழ்ந்திருப்பதைக் காணமுடிகிறது.

"பிரிவினை என்பது வீழ்ச்சியின் அடையாளம்" - மதமாகவோ, சாதியாகவோ மக்கள் பிரிக்கப்படும் பொது அங்கே ஒற்றுமை என்பது கேள்விக்குறியாகிறது. ஒற்றுமை இல்லாத இடத்தில் சமுதாயம் சீரழிகிறது. சீர்குலைவு சக்திகளிடம் மக்கள் இரையானால் அதன் மூலம் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து இந்த சமுதாயத்தை மீட்பது எளிதான காரியமல்ல. 


ஆகவே நல்ல நெஞ்சங்களே .. நல்லவர்களை ஆதரியுங்கள், அல்லது நல்ல அரசியலை படைக்க அரசியலுக்கு வாருங்கள் .. இளைஞர்களாகிய நாம் ஒன்று படுவோம் .. புதிய அரசியல் மாற்றத்த உருவாக்குவோம் ..

(மற்றபடி .. காங்கிரஸ், பாஜக அல்லது மூன்றாம் அணி என்ற முடிவை எடுத்திருப்பவர்களே .. உங்கள் முடிவு ஆரோக்கியமானதே .. செயல்படுங்கள் .. எது சரி என்பதை மக்கள் தேர்ந்தெடுப்பார்கள் ... )
ShareThis