திருப்பூரின் ஒரு முக்கியச் சாலையின் ஓரம். நான்கு மூங்கில்களை முட்டுவைத்து இறுக்கிக் கட்டிவிடப்பட்ட கயற்றின் மேல் ஒரு சிறு பெண் குழந்தை மிக உற்சாகமாக நடந்துகொண்டிருக்கிறாள். அருகில் அவளின் முயற்சிக்குதுணையாக அம்மாவும், அப்பாவும் இசைக் கருவிகளை இசைத்து சுருதிகூட்டுகிறார்கள்.
கண் முன்பாக, வெறும் கம்பு ஒன்றின் துணையோடு வானில்மிதக்கும் குழந்தையைக் கண்டால் எந்த தகப்பனுக்குத்தான் மகிழ்ச்சி பொங்காது?. இருந்தாலும்
அவர்கள் தங்கள் உணர்வுகளை வெளிக்காட்டவில்லை.
கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் விடாப்பிடியாக பயிற்சிசெய்துகொண்டிருந்த அந்தக் குழந்தையின் உழைப்பு நம்மை ஆச்சரியப்படுத்தியது. இந்தியாவில் எப்போதாவது நடக்கப்போகும் ஒலிம்பிக் போட்டியில் கண்டிப்பாக இவள் தங்கம் வாங்குவாள்(!). தனது திறமைக்கு உண்டான கர்வம் துளியும் இல்லாத அவளை நாம் பாராட்டித்தான் ஆகவேண்டும்.
அந்தக் குடும்பத்தினர், மகாராஸ்ட்ரா மாநிலத்திலிருந்து நிதி திரட்டுவதற்க்காக திருப்பூருக்கு வந்திருக்கிறார்கள். தனது கிராமத்திலிருந்த பலரும் திருப்பூர் போன்ற நகரங்களுக்கு கொத்தடிமைகளாக குடி பெயர்ந்துவிட்ட நிலையில், அவர்களுக்கு இதைத் தவிர வேறு வழியில்லை. அந்தக் சிறுமியின் பெயர் ரெஜிதா என்பதும் 6 வயதில்பயிற்சியெடுக்கத் துவங்கி இரண்டே ஆண்டுகளில் கயிற்றில் நடனமாடும் அளவுக்கு முன்னேறியிருப்பதும், விசாரித்தபோது தெரியவந்தது.
தந்தையே பயிற்சியாளராக இருப்பதால், தன் குழந்தையின் இந்த முயற்சிக்கு அவர் தடை ஏதும் சொல்லவில்லை. சொந்தமாக வீடோ, நிலமோ இல்லாததால்அவர்கள் சுதந்திரமாக நாடு முழுவதும் சுற்றுப்பயணம்மேற்கொண்டுவருகிறார்கள். ஆனாலும், இவர்களைக் குறித்து எந்தப்பத்திரிக்கையிலும் செய்தி வெளியாகவில்லை. வீணான விளம்பரத்தைவிரும்பாத, தன்னடக்கம்தான் (!) இதற்குக் காரணமாக இருக்க முடியும்.
மத்தளத்தின் ஒலி காதுகளை நிறப்பியது, சின்னஞ்சிறுமி கயற்ரின் மீது நடந்தும் துள்ளி ஆடியும் செய்த சாகசங்கள் பெரும்கூட்டத்தை ஈர்த்தது. களத்தின் மையத்தில் விரிக்கப்பட்டிருந்த மஞ்சள் துண்டின்மீது, ஒவ்வொருவரும் தங்கள் பங்கிற்கு நிதியளித்தார்கள். என்னவாகிலும், இந்தக் கலைக் குடும்பத்தை ஊக்குவிப்பது ஒவ்வொரு இந்தியனின் கடமையில்லையா.
ஆட்டம் முடிந்ததும் மூங்கில் குச்சிகள்கழற்றப்பட்டன. ரெஜிதா ஓய்வு நிலைக்கு திரும்பினாள், சிதறிக் கிடந்தசில்லரைகளை குடும்பத்தினர் மூவரும் எடுத்து எண்ணினார்கள். சுமார் நூறு இருனூறு ரூபாய்கள் தேரின. இந்தப் பணம் அந்தக் குடும்பத்தின் ஒரு நேர உணவுக்குக் கூட தேராது என்றநிலையில், அவர்கள் அடுத்த இடம் நோக்கி நகரத் தொடங்கினார்கள்.
சர்வதேசபோட்டிகளில் கலந்துகொள்ள எப்படியும் ஒரு விளையாட்டு வீரனுக்கு சில லட்சங்களாவது வேண்டும். பரவாயில்லை, ரெஜிதாவுக்கு இப்போது வயது 8 தான். அவளுக்கு, இன்னும் பல வருடங்கள் இருக்கின்றன !.
கண் முன்பாக, வெறும் கம்பு ஒன்றின் துணையோடு வானில்மிதக்கும் குழந்தையைக் கண்டால் எந்த தகப்பனுக்குத்தான் மகிழ்ச்சி பொங்காது?. இருந்தாலும்
அவர்கள் தங்கள் உணர்வுகளை வெளிக்காட்டவில்லை.கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் விடாப்பிடியாக பயிற்சிசெய்துகொண்டிருந்த அந்தக் குழந்தையின் உழைப்பு நம்மை ஆச்சரியப்படுத்தியது. இந்தியாவில் எப்போதாவது நடக்கப்போகும் ஒலிம்பிக் போட்டியில் கண்டிப்பாக இவள் தங்கம் வாங்குவாள்(!). தனது திறமைக்கு உண்டான கர்வம் துளியும் இல்லாத அவளை நாம் பாராட்டித்தான் ஆகவேண்டும்.

ShareThis