
(விவாதிப்போம் .. இன்னும் ஒரு அடி முன்னேறுவோம் ... )
வங்கிகள் இன்றைய சமுதாயத்தின் அவசியத் தேவையாக இருக்கின்றன. எந்தஒரு தொழிலும் தொடர்ந்து நிலைத்திருக்க தொழில் நுட்பரீதியில் தன்னைமேம்படுத்திக் கொள்வது அவசியமாக இருக்கிறது. உற்பத்தி திறனை காலத்திற்கு தகுந்த வகையில் மேம்படுத்தாவிட்டல் காலத்தில் அத்தொழில் நலிந்து மறைந்துபோகும். அப்படித்தான் விசைத்தறிகளின் பெருக்கத்தால் கைத்தறி நசிந்திருக்கிறது.
திருப்பூர்போன்ற தொழில் நகரங்களுக்கு இந்த விதி மிகச் சிறப்பாகப் பொருந்தும். சீனாவிற்கு ஈடாக போட்டி போடும் நிலையில் இருக்கும் நமது திருப்பூர்தொழிலகங்கள் குறைந்த திறனைக் கொண்ட இயந்திரங்களை அதிகமாகக்கொண்டுள்ளன. அதன் எதிர்வினையாக தொழிலாளர்களை ஒட்டச் சுரண்டி, அதன்மூலம் குறைந்த விலையில் பனியன்களை உலகச் சந்தையில் விற்றுலாபம்பார்க்கும் நிலைதான் இங்கே நிதர்சனமாகியுள்ளது.
இந்த நிலையில் வங்கிகளின் பாத்திரம் மிக முக்கியமானது. ஆனால் வங்கிகள்யாருக்கு உதவி செய்கின்றன?. அவைகளால் நடந்த நன்மை என்ன? என்றுபார்த்தால்.
முதலீட்டுக்கும் அதிகமான கடன்:
கடந்த செப்டம்பர் மாதம்வரையில், (வங்கி அரையாண்டு) திருப்பூர் மாவட்டவங்கிகளில் முதலீட்டின் அளவு ரூ.5 ஆயிரத்து 878 கோடியே 52 லட்சம். திருப்பூர்மாவட்ட வங்கிகளில் வழங்கப்பட்டுள்ள 10 ஆயிரத்து 211 கோடியே 90 ஆயிரம். அதாவது பெறப்பட்ட முதலீட்டுக்கும் அதிகமான தொகை கடனாகதரப்பட்டுள்ளது. கடன் முதலீட்டு விகிதம் 174 சதமாக உள்ளது. இது ஒருவகையில்ஆபத்தான சமிக்கையே, இருந்தாலும் சிறு முதலீட்டாளர்கள் அதிகம்இருக்ககூடிய திருப்பூரில் அதிக கடன் தரப்பட்டிருப்பது முன்பு கூறியதைப்போன்ற விளைவுகளை ஏற்படுத்தலாமோ என்று பார்த்தால், அதுவும் இல்லை.
தொழிலா? விவசாயமா?
வழங்கப்பட்ட கடன்களில் முன்னுரிமை தொழில்களுக்கு வழங்கப்பட்ட கடன்கள்ரூ.5533.44 கோடி. மாவட்டத்தில் பாதிக்கும் அதிகமானவர்கள் சார்திருக்கும்விவசாயத்திற்கு தரப்பட்ட கடன் 10% மட்டும் அதாவது 1092.85 கோடி. நடைமுறையில் முன்னுரிமைக்கடன்கள் ஏற்கனவே தொழில் செய்து அதிகலாபம் பார்த்துள்ள முதலாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளதே அன்றி, திறமைஇருந்தும் புதிதாக தொழில் துவங்க வாய்ப்பு இல்லாமல் தவிக்கும் இளைஞர்கள்யாருக்கும் தரப்படவில்லை. கடன் தருவதற்கு முன் நிபந்தனையே “எவ்வளவுசொத்து உள்ளது?, எத்தனை ஆண்டுகளாக தொழிலில் இருக்கிறாய்” எனப்துதானே?. விவசாயக் கடன்கள் பெறச் செல்லுபவர்களின் நிலையோஇன்னும் பரிதாபம், ”விதை, உரம், பூச்சிக்கொல்லி மருந்துகள் என எதற்கும் கடன்தர விருப்பமில்லாத வங்கிகள், டிராக்டர், கார் போன்றவைக்கே அதிக கடன்தருகின்றன” என்று கூறுகின்றனர். அப்படித்தரப்படும் கடன் தொகை நேரடியாகவாகன தயாரிப்பு நிறுவனங்களின் கைக்கே செல்லுகிறது.
சுய உதவிக் குழுக்கள்:
பெண்களை பெருமளவு ஈர்த்திருக்கும் சுய உதவிக் குழுக்களில் சுமார் 700 குழுக்களுக்கு ரூ.4.20 கோடி கடனாக வழங்கப்பட்டுள்ளது. அதாவது ஒருகுழுவுக்கு தலா 60 ஆயிரம். தாட்கோ மூலம் அரசின் கருணை உதவி பெற்றவைகுழுக்கள். மீதமுள்ள 550 குழுக்கள் கடனை முழுவதும் வட்டியுடன் திருப்பிசெலுத்தவேண்டும். தனியார் கடன் பெற்றவர்கள் வெறும் 248 பேர். பிரதம மந்திரிவேலைவாய்ப்பு பெருக்கத் திட்டத்தில், ரூ.24.54 நான்கு கோடிக்கு உதவிபெற 184 நிறுவனங்கள் தேர்வுசெய்யபட்டுள்ளன. அதற்கான அரசு உதவித்தொகை 8 கோடியே 23 லட்சம் ஆகும்.
கல்விக் கடன்:
பெறுமளவு விளம்பரம் செய்யபட்ட கல்விக் கடன் இதுவரைவிண்ணப்பித்தவர்களில் 2691 பேருக்கு வெறும் ரூ.56.56 கோடி அதாவதுசராசரியாக ஒருத்தருக்கு 20 ஆயிரம். இன்னும் நூற்றுகணக்கான மாணவர்கள்கல்விக் கடன் கேட்டு பல வங்கிகளுக்கு அலைந்துகொண்டிருக்கின்றனர்.
மேற்கண்ட விபரங்களின் படி பொதுவாக மக்களுக்கு தரப்பட்ட மொத்த கடன்தொகை 28.74 கோடி, அதிலும் அரசு திட்டங்கள் மூலம் வந்த உதவி 8 கோடியே 32 லட்சம். விவசாயக் கடனில் பயனடைந்த சாதாரண ஏழை விவசாயிகள் குறித்தபுள்ளி விபரங்கள் நம்மிடம் இல்லை, அந்தத் தொகை முழுவதையும் கழித்தாலும், திருப்பூர் முழுக்க சுமார் 9 ஆயிரம் கோடி ரூபாயை கடனாகப் பெற்றவர்கள் யார்? அவர்கள் “நிறைய சொத்து வைத்திருக்கும், நீண்ட நாளைய தொழில்அனுபவசாளிகள்” ... [:)] சுறுக்கமாக, ஏற்கனவே லாபத்தில் கொழுத்துஉப்பியிருக்கும் தொழில் அதிபர்கள். இது அரையாண்டிற்கான கணக்கே.
அத்தகைய அதிபர்கள் முதலீட்டுடன், கடனும் பெற்று திறன் வாய்ந்தஇயந்திரங்களை வாங்கி தொழில் நடத்தும்போது குறைந்த செலவில் பனியன்தயாரிக்க முடியும் .. சிறு முதலாளிகள் அவர்களிடம் போட்டி போட முடியுமா? அப்படி திறன் அதிகரித்தாலும் தொழிலாளர்களின் கூலியை அவர்கள்உயர்த்துவதில்லை. இன்னும் பல சலுகைகளுக்காகவும் அரசை மன்றாடிபெற்றும் விடுகிறார்கள். சிறிய முதலாளிகளும், சிறிய வணிகர்களும், தொழிலாளர்களும், நடுத்தர மக்களும் தங்கள் அடித்தளம் சரிவதை தடுக்கமுடியாமல் தவிக்கிறார்கள். உலகமய சூழலில், சீனா, வங்காளதேசத்தின்போட்டியும் வேறு அவர்களைத் திணறடிக்கிறது.
”இந்த நிலை மாறி சிறு முதலீட்டாளர்களும், ஏழை மக்களும் பயனடைவது எப்போது? ...
விவாதிப்போம் .. மறுமொழியிடுங்கள் ......
விவாதிப்போம் .. மறுமொழியிடுங்கள் ......
ShareThis