
படம் பாத்துட்டு அழகா விமர்சனம் பண்ணறாங்க. எங்க, “நீ ஒரு நல்ல கதை சொல்லு” நு கேட்டா மழுப்பராங்க.
சிலபேர் நாம ஒரு பதிவு எழுதினா மொக்கைனு சொல்லராங்க, அதே அவங்க ஒரு மொக்கை பதிவ எழுதிட்டு யாருக்கும் ரசனையே இல்லை நு திட்டராங்க.
மெசேஜ் அனுப்புனா ரிப்ளை பண்ணரதே இல்ல, ஆனா நாம பிசியா இருக்கும்போது டொய்ங் டொய்ங் நு ஒரே தொல்லை பண்ணி கொல்லராங்க .. என்னதாயா நெனக்குறீங்க? அவனவனுக்கு ஒரு நியாயமா? அவனவனுக்கு ஒரு சட்டமா?
ஆனா அப்பிடித்தான இருக்கு? ..
தனக்குனு வந்தா ஆஃப்ட்ரால் ஜேப்படி திருடனக் கூட கொன்னு எடுத்திடராங்க. அடுத்தவனுக்கு னா கொலைக் குத்தம் கூட சாதாரணமா போயிடுது. பேப்பர் நியூஸ்ல படிச்சிட்டு, ஜாலியா கமெண்ட் பண்ணிட்டு விட்டராங்க.
இப்பிடி என் நண்பர்கிட்ட சொன்னா அவர் கேட்குறார் “இவங்கள எப்பிடித்தான் யா திருத்தறதுனு?”
என்னமோ அவர் பெரிய யோக்கியர் மாதிரி.
போன வாரம் முழுக்க ”தெலங்கானா” தான் ஹாட், டாபிக். சோ.. விலைவாசிய மறந்தாச்சு, இப்ப திவாரி, அடுத்தது ... அடிப்படை பிரச்சனை எது தெரியுமா? நம்ம அரசாங்கத்தோட கொள்கை. அவங்களுக்கு விலைவசியும் தெரியாது, வெங்காயமும் தெரியாது. போனமாசம் நாடாளுமன்றம் நடந்தது, 21 நாள், அதுல
10 நாள் - லிபரான் கமிசன்
6 நாள் - தெலங்கானா
மீதி 6 நாள்ல 100 க்கும் அதிகமான மசோதாக்கல் நிறைவேற்றம். இதுல எதாச்சும் பத்தி நமக்கு தெரியுமா? எதுபத்தியாவது விவாதம் நடந்துச்சா?. அதுல எதாச்சும் செய்தியாச்சா? ஒரு மங்கானியும் இல்ல.
நம்ம எம்பிக்கல்ல 60 சதம்தான் பிரசண்ட், மத்தவிங்க நாடாளுமன்றத்துக்கு வரவேயில்ல.
இதெல்லாம் யாருங்க கேள்வி கேட்குறது? -- நாமதான கேட்கனும்?
இப்பிடி, நான் சொல்ல வர்ரது என்னனா? .. இனிமேல் ஒரு டாபிக்க பேசுன அதுல அடுத்தகட்டமா என்ன செய்யரதுனும் சேர்த்து யோசிங்க.
அரசியல் பத்தி நெரயாபேர் பேசரீங்க. ஆனால் செயல்ல ஒன்னுமே இல்லை, சிலர் அரசியல் பத்தி பேசரதே இல்ல, சாக்கடைனு ஒதுக்கிடராங்க.
வாழ்க்கைய தீர்மாணிக்கர விசயமா அரசியல் இருக்கு. எனவே இனிமேல், அரசியல் பத்தி பேசரவங்க செயல்ல இறங்கவும் பாருங்க. இதுவரைக்கும் பேசாதவங்க, அது பத்தி பேச ஆரம்பிங்க.
(குறிப்பு: இதுக்கு உடனே .. “என்னமோ இவர் பெரிய யோக்கியரா? நு கமெண்ட் போட வேண்டாம். விளையாட்டா எழுதுனாலும், இது சீரியசான பதிவு)
ShareThis