3 இடியட்ஸ் - ”ஆல்ஈஸ்வெல்” (ஐன்ஸ்டீனுக்கு சமர்ப்பணம்...!).


3 இடியட்ஸ் - ”ஆல்ஈஸ்வெல்”

நம்ம ஸ்கூல் லைஃப் நியாபகம் இருக்கா?. ஒரு கிளாஸ்ரூம், அதுல லாஸ்ட் பெஞ்ச்ல ஜலியான வாலு பசங்கலும், ஃபர்ஸ்ட் பெஞ்ச்ல ஜால்ரா பீட்டர்சும் இருப்பாங்க ... அதுல யாரு வாழ்க்கையில ஜெயிப்பாங்க? அப்படினு கேட்டா ..

அது எதுக்குங்க இப்ப? .. ”படிப்புல வெற்றி முக்கியமில்ல, திறமை வளருதாங்கறதுதான் முக்கியம்”

”3 இடியட்ஸ்” நேத்துதான் படம பார்த்தேன், சே .. வாழ்க்கையில உணர்ந்தத பார்த்தேன். எனக்கு இயற்பியல், வேதியல், சைன் தீட்டா, காஸ்தீட்டா .. சுத்தமா ஆகாது. கவிதை பாட்டுனாதான் ரொம்ப புடிக்கும், கதை புத்தகம் படிப்பேன், வரலாறு பிடிக்கும், அறிவியல் புத்தகங்கள் பிடிக்கும் ... ஆனா பாட புத்தகம் சுத்தமா ஆகாது.

12 வது படிக்கும்போது நான் ஃபர்ஸ்ட் குரூப் .. அய்யோ கிளாஸ் ஒவ்வொன்னும் படு மொக்க. நமக்கு அறிவியல் பிடிச்சாலும், அந்த கிளாஸ் ரூம், பரிட்சை, ரேன்க் கார்ட் .. எவனுக்குத்தான் பிடிக்கும்? இந்த சிஸ்டம் எத்தன அப்பாவி மாணவர்களை தற்கொலை செய்ய வெச்சிருக்கு? ... “ஆசிரியர்கள் காரணமில்லை, இந்த கல்வி முறை .. அதான் காரணம்” ) இது அந்த
இடியட்ஸ் சொல்றது.

உண்மைதான, நம்ம திறமைகளை வளர்த்தெடுப்பதுதான கல்வியா இருக்க முடியும்? .. அத விட்டு வேலை கிடைக்க, நிறைய சம்பாதிக்க எது தேவையோ .. அத சொல்லிக் குடுக்கறதுதான இன்னிக்கு கல்வியா இருக்கு?

சிறமப்பட்டு ... படிச்சு .. பாஸ் ஆனா .. குமாஸ்தா ஆகலாம், ஒருவேளை கை நிறையா சம்பளம் கூட கிடைக்கலாம், ஆனால் யந்திரப் பிழைப்பு ...

விருப்பபட்டு ... படிச்சு திறமைய வளார்த்திக்கிட்டா? அதுதான வாழ்க்கை, வாழலாம்

சில மாதங்களுக்கு முன்பாக வெகுவான தமிழகத்தில் விவாதத்தை கிளப்பிவிட்டது சமச்சீர் கல்வி. ஆனால் அது குறித்த பார்வை பலருக்கும் பல விதமா இருந்தது. இந்த படம் பார்த்தா அந்தக் குழப்பம் தெளியும்.

வசதிகள், போதிய உபகரணங்கள், ஆசிரியர்கள் இத்தோட மாணவர்களைப் புரிந்த கல்வி முறை.. இதெல்லாம் ”அனைவருக்கும்” சமமாகக் கிடைக்கனும். அந்தக் கல்வி முறை .. நிறைய இடியட்ஸ் அ உருவாக்கனும்.

கதைச் சுருக்கம்: மூன்று நண்பர்கள், ஒருவன் படிப்பில் சுமார், ஒருத்தன் புகைப்படக் கலைஞன், ஒருத்தன் இயற்பியலில் திறமை வாய்ந்தவன். இவங்க மூவரும், அவங்க கல்லூரியால் இடியட்ஸ் ஆக ஒதுக்கப்படுகிறார்கள். ஆனால் சொந்த திறமைகளின் மூலம் நம்பிக்கையை பெற்று வாழ்வில் கால் ஊன்றுகிறார்கள். அதற்கு ஊக்கம் தருபவர் இடியட்ஸ் இல் ஒருவரான அமீர்.

திடீரென்று காணாமல் போகும் அவரை, பத்து வருடங்களுக்கு பிறகு கிடைக்கும் ஒரு தகவலை வைத்து மற்ற இருவர் தேடிச் செல்ல ... படம் விரிகிறது. சிரிப்புக்கு உத்தரவாதம், சிந்தனைக்கும் ...

மந்திர வார்த்தை : ஆல் ஈஸ் வெல் ... (படம் முழுக்க இதற்கு எத்தனையோ அர்த்தங்கள்.)

சேத்தன் பகத்தின் நாவலைத் தழுவி எடுக்கப்பட்டிருக்கிறது படம். சிறப்பம்சங்களில் வசனங்களும் ஒன்று.

  • முக்கியமா, கல்லூரி விழாவில் படிப்பாளி மாணவன் சதூர் பேசுவதற்காக தயார் செய்து வைத்திருக்கும் குறிப்புகளில் 'சமத்கார்' என்று உள்ள இடங்களிலெல்லாம் 'பலாத்கார்' என்று அமீர் மாற்றிவைத்துவிட, விழாவில் சதூர் பேசும்போது உண்டாகும் கலகலப்பு. ஊரே சிரிக்குது, நம்மால முடியல .. இந்தி தெரியலையே ...
  • படிப்பு முடிந்து நேர்முகத்தேர்வுக்கு செல்லும் மாதவன் நிச்சயம் வெற்றி பெற்றுவிடுவார் என்ற நம்பிக்கையில் அவரது அப்பா புதிதாக லேப்டாப் வாங்கிவைத்திருப்பதும், மாதவன் இண்டர்வியூவிற்கு செல்லாமல் திரும்பி வந்து தனக்கு எஞ்சினீயர் வேலை பிடிக்கவில்லை என்றும், தனது புகைப்படக் கலை விருப்பத்தைப் பற்றியும் தந்தையிடம் பேசும் காட்சியில் மிக நெகிழ்ச்சியான உணர்வு. ஊரே நெகிழுது, நம்மால முடியல .. இந்தி தெரியலையே ...
  • நேர்முகத் தேர்வின்போது சக்கரநாற்காலியில் வரும் சர்மான் ஜோஷியைப் பார்த்து அதிகாரிகள் கேட்கும் கேள்விகளும் அதற்கு சர்மான் அளிக்கும் பதில்களும் அற்புதம். அடேங்கப்பா நு சொல்லலாம் .. இந்தி தெரியல ..

மொழியத் தாண்டி .. புரியுது, அதாங்க படத்தோட வெற்றி ...

எனக்கு பிடித்த பாடல் வரிகள் ..

Give me some sunshine.
Give me some rain.
Give me a chance to grow up once again.

மனசார உணர்ந்த வரிகள் இவை ...

”மூன்று முட்டாள்கள்”, தினம் தினம் இந்த உலகத்தால் முட்டாள்களாக ஒதுக்கப்படும் பலரில் .. சிலர். எனக்கு படம் பிடிச்சிருக்கு .. நீங்க கண்டிப்பா பாருங்க.
தலைப்பு ஏன் ஐன்ஸ்டீனுக்கு சமர்ப்பணம்னா .. அவரும் ஒரு இடியட் தான?

(இந்த படத்தை வெளியிட்டிருப்பது பிக் சினிமாஸ் .. அதான் கொஞ்சம் நெருடல் .. )
ShareThis