తెలంగాణ - (தெலங்கானா) இது பிச்சிப்போட்ட ஜிலேபி மாமே ... !


தெலங்கானா தான் இப்ப ஹாட் டாபிக், என்ன மாதிரி வளரும் வலைப்பதிவர், இன்நேரம் இத பிச்சி பெடலெடுத்திருக்க வேண்டாமா? இவ்வளவு நாள் ஏதோ நெனப்புல விட்டு வெச்சிட்டேன் .. இனிமே அப்படி இருக்க முடியாது .. ஏ ... தெலங்கானா ... நீவுகாரு இப்புடு சூடு ...

சந்திர சேகரராவ் உணாவிரதம் நு சரவெடி கொளுத்தி போட்டார் .. காந்தி ஸ்டைல இது அகிம்ச ... நு நெனச்சா ... பின்னலேயே பஸ்ஸ கொளுத்தி ”டர்ர்ர்...” ஆக்கிட்டாய்ங்க ...

முதலமைச்சர் “ரோசையா” பாவம் ...
இப்பத்தான் கச்சிய கட்டி காப்பாத்தி முதல்வர் நாற்காலி ஃபிட் ஆனார் ... அவருக்கு சனி உச்சத்துல குத்திட்டான் .. தொல்லை மேல தொல்லை .. மனுசன் வெல வெலத்துக் கிடக்கார் ...

அவர் அப்பிடியே ஹை டோன்ல ... அங்கிருந்து டெல்லிக்கு ஃபோனடிக்க, அவங்க சடார்னு எதோ பேப்பர எடுத்து வெச்சிட்டு தெலங்கானா கொடுத்திருறேன் என்ன விட்டுடு நு கதர ஆரம்பிச்சுட்டாங்க .. கேட்டா அது காங்கிரசோட தேர்தல் அறிக்கை வாக்குறுதியாம். இப்பதான் நியாபகம் வந்துச்சாம்

(இந்த இடத்துல நமக்கு ஒரு கேள்வி, பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு கேட்டா மட்டும் ... விவாதம் நடத்தனும், நாடாளுமன்றத்துல ஒருமித்த கருத்து வேணும்னு சொல்லராங்களே.. இதுக்கு ஏன் யா பறக்குறீங்க? அதுவும் எல்லா கட்சிகளோட தேர்தல் அறிக்கைலையும் வந்தது தான?)

.. “அமைப்போம் தனித் தெலங்கானா” அறிவிப்பும் வந்திச்சு .. வந்திச்சு.......... ஆனா வரல ...எது வந்திச்சு ?.. மேலும் 20 மாநிலங்கள் வேணும் நு கோரிக்கைதான் வந்திச்சு ..இப்ப ஆந்திரா முழுக்க பிரச்சனை வந்திச்சு .. மவனே எவனும் வீட்ட விட்டு வெளிய போகமுடியாது. நிலமை அவ்வளவு மோசம்.

அங்கிருக்கற மக்கள் எல்லா சேர்ந்து இந்த அரசியல் வாதிகளை தமிழ்நாட்டுக்கு டிரான்ஸ்பர் செய்யுங்க நாங்க கொஞ்சம் அமைதியா இருக்கரம் நு சொல்லர வரைக்கும் அவங்க சண்டை தீராது.

ஜிலேபிய பிச்சி போட்டா ஜாலியா தூக்கிட்டு போலாம் நு எரும்புகள் காத்திட்டு இருக்கு .. எனக்கு கேள்வி என்னனா .. பின் தங்கியிருக்கர பகுதியை எல்லாம் தனி மாநிலமா பிரிச்சா என்ன நடக்கும்? ... வருமானமே இல்லாத பகுதிய அத்து விட்டுடா அது தானா வளந்திருமா? சரி .. இந்த விவாதத்தக் கூட அப்புறம் வெச்சுக்கலாம்.

ஏன் தெலங்கானா பிரச்சனை மேலும் மேலும் கொதிப்படையுது?

அதுக்கு முக்கிய காரணம், சந்திர சேகர ராவும் இல்லை, பனாரமா பகோடாவும் (!) இல்ல ... பிரச்சனையே வேலை இன்மை, எதிர்காலம் குறித்தம் பயம் இவையெல்லாம் தான். போராட்டத்துல குதிச்சிருக்கும் முக்கிய தலைகள் மாணவர்கள், அவர்களுடைய எதிர்பார்ப்பு .. “தெலங்கானா மாநிலம் அமைந்தால், மாநில அரசு வேலைகளில் தெலங்கானா பகுதி மாணவர்களுக்கு அதிக வேலை வாய்ப்பு கிடைக்கும், அதன் மூலம் தங்கள் இருந்த எதிர்காலத்திற்கு சிறு ஒளி கிடைக்கும்” என்பதுதான்.

”இப்போது இல்லாவிட்டால் எப்போது?” இதுதான் அவங்க முழக்கமே இந்த முழக்கத்துடன் .. நேற்று மட்டும் அப்பகுதியில் லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் திரண்டிருந்தார்கள்.

ஒரு தனி மநிலம் அமைந்தால், இப்போது இருக்கும் நடைமுறைப்படி சில மாநில அரசு வேலை வாய்ப்புகள் உருவாகலாம். ஆனால் உண்மையில் அது யானைப் பசிக்கு சோளப் பொறியாகத்தான் அமையும். வேண்டியது புதிய மாநிலம் அல்ல, பின்தங்கிய பகுதிகளை பிரத்னிதித்துவப் படுத்தும் புதிய கொள்கை. இந்தியாவின் இளைய சக்தியை பயன்படுத்தும் தொலைநோக்கு .. இந்த இரண்டு நோக்கும் இல்லாத அரசுகளால் தான் இப்போது பிரச்சனையே உருவாகியிருக்கிறது.

அரசு வேலைவாய்ப்புகளை குறைக்கும் போக்கைத்தான், தற்போதைய ஆந்திர அரசும் செய்துவருகிறது, மய்ய இந்திய அரசும் அந்தப் பாதையில் தான் பயணிக்கிறது. இந்த நிலையில் புதிய மாநிலம் அமைந்தாலும் அவர்கள் எந்த வகையில் கொள்கையை மாறுவார்கள்?

அந்த மாணவர்களின் ஒரே எதிர்பார்ப்பு, சமூகப் பாதுகாப்புள்ள வேலை வாய்ப்பு.

கனவுகள் கொளுந்துவிட்டு எறியத் துவங்கியிறுக்கிறன. பலரும் திசை திருப்பிவிட்டு குளிர் காய்ந்துகொள்ளப் பார்க்கிறார்கள்.


ஒருவேளை இளமையின் சக்தி ஏமாற்றப்படலாம்! .. எல்லாவற்றிற்கும் வரலாறு பதில் சொல்லும்.



பிரிவினைக் கோசங்களை முன்வைக்கும் எவரும் ஆந்திரக் கவிஞனின் இந்த வாசகத்தை தெரிந்துகொள்ளட்டும், “தேசம் என்பது மண்ணல்ல ... மக்களே” .. நீங்கள் எல்லைக் கோடுகள் மூலம் எங்கள் இதையங்களைக் கிழிக்கிறீர்கள்.

(சர்ர்ர் நு ஆரம்பிச்சு .. டச்சிங்கா முடிச்சிட்ட .. வெரிகுட் சிந்தா ... )


ShareThis