ஆனால் ஏற்ற பெண்ணைத் தேடி, அவருக்கும் என்னோடு வாழ விருப்பம் இருந்தால் மட்டுமே, முதலில் நண்பர்களாகவும், பின்னர் இருவரும் துணைவியாக வாழ்வைப் பகிர்வதை நோக்கியும் செல்லலாம். என்பதே என் முடிவு.
படிவத்தை அனுப்பியதும், அவர்கள் என்னை தொடர்புகொள்வார்கள் என்று நான் நினைத்தேன். அப்போது ஒரு விரிவான மடல் கொடுக்கலாம் என்றுதான் நினைத்தேன். ஆனால் எனது படிவம் அப்படியே விளாம்பரமாகிவிட்டது. அந்த விளம்பரத்தை பார்த்தால் எனக்கே சிரிப்பு வருகிறது.
அதில் (அவசரமில்லை) என்று குறிப்பிட்டிருந்தாலும், என்னைத்தேடி பல அழைப்புகள் வந்துவிட்டன. பதில் சொன்னாலும், அட எதிர்பார்ப்பை உருவாக்கிவிட்டோமே என்று சங்கடமாக இருக்கிறது. அன்புக்குறிய தமிழிஷ் நண்பர்களே, இப்போது என் நிலை உங்களுக்கும் சிரிப்பாக இல்லையா?. அந்த விளம்பரத்தில், எனக்கென ஒரு காதலி தேவை என்றல்லவா இருந்திருக்க வேண்டும். ஹ ஹா .. பரவாயில்லை.
இப்போதும் அறிவிக்கிறேன். வரதட்சணை என்ற சொல்லிலேயே எனக்கு உடன்பாடு கிடையாது. வந்தாரையெல்லாம் வாழவைக்கும் தமிழ் மண், வாழ்வைப் பகிர்ந்து வாழ வரும் உறவிடம் தட்சணை கேட்டால் அது அவமானச் செயலில்லையா?. ஆனால் இப்போதைக்கு நான் காதலிக்கும் கட்டத்தில் தான் இருக்கிறேன்.
முதலில் நண்பராவோம், நேசம் உருவானால், பிற்காலத்தில் அது உறவாகட்டும். [:)]
பதிவுலகத்தார் இந்த விளக்கத்தை ஏற்பாராக ....
ShareThis
