துளிப்பாக்கள் ... இரா.சிந்தன்.


எப்படி உடைக்க?

வியர்வை சிந்திக்
கட்டிய வீடு
ஜன்னலோரம் குழவிக் கூடு


--

எப்படிப் பேச?

கோவில்
நான்,
அவள்,
அம்மா !


---

எப்படிச் சொல்ல?

கிழிந்த ஆடை
தங்கை வயது

மொழியறியாத
பிச்சைக்காரி !

---

எப்படி யோசிக்க?

தனி அறை
காற்றாடி
தொலைகாட்சி

--

எப்படி ரசிக்க?

அழகிய மாலை
நல்ல மழை
இல்லை வீடு


--

எப்படி வாங்க?

அழுகிறாள்
மகளின் ஆசை
பலூன்காரன் .. !

---

எப்படி நிறப்ப?

ஆட்சியர்
அலுவலகத்தில்
மாணவர்கள்

கோரிக்கை மனுவிற்கு
காகிதம் தயார்

”சொல்லித்தரவில்லை
பள்ளிக்கூடம்”

---

ShareThis