கோர்க்கப்படாத இந்த நடை படித்த பின் உங்களுக்கு பிடித்திருக்கிறதா? .. கருத்து சொல்லுங்கள் நண்பர்களே...நேத்து திருப்பூர் துணிக்கடை வியாபாரிகளை பார்க்கப் போயிருந்தேன். நம்ம திருப்பூர் மங்கலம் ரோட்டுல சபரி பேரடைஸ் வெச்சிருக்கர திருணாவுக்கரசு அன்னா என்ன சொன்னார்னா ”தீபாவளி துவங்கினால், பொங்கல் வரை புத்தாடைகள் வியாபாரம் நன்றாக நடக்கும், ஆனால் இவ்வாண்டு பொங்கல்ப் பண்டிகையை ஒட்டி வியாபாரம் பெரிதாக நடக்கவில்லை. புத்தாடைகள் வாங்குவதில் மக்கள் உற்சாகம் காட்டவில்லை.”
சாய, சலவைப் பட்டறைகள் வேலை நிறுத்தம், தொடர்ச்சிசியான மின் தட்டுப்பாடு மற்றும் பொருளாதார நெருக்கடியால் ஏற்பட்ட வேலை இழப்புகள் ஆகியவையே தற்போதைய நிலைக்கு காரணம். சாதாரண மக்களின் நிலை ரொம்ப மோசமா இருக்கு ...
சிறுதொழில்கள், சிறுவணிகம், விவசாயம் குறித்த அக்கரையற்ற அரசின் கொள்கைகள் அவற்றை முடிந்த அளவுக்கு சீரழித்துவிட்டன. மிச்சமிருப்பதையும் வரும் காலத்தில் அவர்கள் மொத்தமாய்ச் சிதைப்பார்கள்.
----
> இந்தவருடம் பெரிய எதிர்பார்ப்புடன் தான் வெளியிட்ட அனைத்துப் படங்களும் ஊத்தி மூடியதை அடுத்து, எப்படி ஓட வைக்கலாம் என்று முசுவில் சன் டிவி மூழ்கியுள்ளது. டீலா? நோ டீலா? என்று அலரிக் கொண்டிருக்கிறார்கள் அவர்கள். தொலைக்காட்சிகளில் அனைத்தும் தொடர்ந்து பிளாப்பான படங்களே வரிசையாக பல்லைக் காட்டுகின்றன. கஸ்டத்தில இருக்காங்கப்பா ...
> ரஜினி அரசியலுக்கு வரமாட்டார் என்று தெரிந்த பின்னரும் நமக்கு கொண்டாட்டம் ஒருகேடா? அசினை மொத்தமாக இந்தி திரைக்கு தாரை வார்த்துவிட்ட தமிழ் சினிமா, கடந்த காலத்தில் ஸ்ரீ தேவிக்கு இழைத்த அதே கொடுமையை இப்போதும் செய்கிறது. திரிசா மோகம் எல்லோருக்கும். போங்கையா ...
----
அட நாம்தான் ஒரு சாபம் விடலாம் என்றால், மழை நின்று மாதம் பலவாகிறது... ஊரே புலம்பல் கேசாக அலையும்போது புதிதாக என்ன சாபமிட?
”ஆயிரத்தில் ஒருவன் ஓவர் மொக்கையா வரப் போகுது, குட்டி “திருவிளையாடல்” அட்டர் காப்பி, ”தமிழ் படம்” தியேட்டருக்கே வராது போங்கையா இந்தவருசம் பொங்கல்ல எல்லாருக்கும் அல்வாதான் ... ”
-
ஒவ்வொரு வீட்டுக்குள்ளும் கேட்கிறது ஜன.13 ம் தேதிமுதல் 16 வரை உங்கள் ... டிவியில் அனைத்து நிகழ்ச்சிகளையும் பாருங்கள் .. பொங்கல் பொங்கோ பொங்கென்று பொங்கட்டும் ...
ஜன.12 ஆம் தேதி:
மிச்சமிருக்கும் ஒற்றை பீடியும் உரிஞ்சி முடித்துவிட்ட சோகத்தில் தாடியைத் தடவி யோசிக்கிறான் பச்சைத்தமிழன்.
சென்றவருடம் இலவசமாக வழங்கிய மண்டை வெல்லம், பச்சரிசியை நிறுத்திவிட்டது தமிழக அரசு. பசியால் சாகும் மனிதர்களுக்கு மருத்துவக் காப்பீடும் பொருந்துவதில்லையே இந்தக் கவலைகள் அவனுக்கு.
---
நாளைமுதல் சிறப்பு நிகழ்ச்சிகள் துவங்கிவிடும்...
ShareThis