திருப்பூர் பழைய பேருந்து நிலையத்திற்கு அருகில், மங்கமல் சாலையல் கே.ஆர்.சி சிட்டி செண்டர் மைதானத்தில் “திருப்பூர் 7 வது புத்தகக் கண்காட்சி 2010” நடைபெறுகிறது. பாரதி- பின்னல் புத்தகாலயங்கள் இணைந்து 7 வருடங்களாக விடாப்பிடியாக இந்த முயற்சியை செய்துவருகிறார்கள்.
இந்த ஆண்டும் லட்சக்கணக்கான புத்தகங்கள் வந்திருக்கின்றன. ஜன.29 முதல் பிப்., 7 வரை நடக்கிறது. அறிந்த நண்பர்களிடம் சொல்லுங்கள். புத்தகங்கள் வெளிச்சம் பரப்பட்டும்.
முதல் நாள் நிகழ்வு மிக சுவாரசியமாக அமைந்தது, அமைச்சர் மு.பெ .சாமிநாதன் கண்காட்சியை திறப்பு செய்தார். உள்ளே சென்று புத்தகங்களைப் புரட்டிய திராவிடக் கொழுந்துகள், ஒரு புத்தகம் கூட வாங்கவில்லை. விடுவார்களா கண்காட்சி அமைப்பாளர்கள்? ... “தலையணை அளவில் இரண்டு புத்தகங்களை - “ஈவெரா எனும் நான்” - கைகளுக்குள் பரிசாகத் திணித்துவிட்டார்கள்.”
மாவட்ட ஆட்சியருக்கும் கூட அந்த ஆர்வம் இருப்பதாகத் தெரியவில்லை. பத்துநாளில் ஒரு நாளேனும் அவர்கள் வந்து புத்தகம் தேடிப் பெறுவார்களா என்று பொருத்திருந்து பார்ப்போம்.
-
ஒரு புத்தக விற்பனையாளரிடம் பேசிக் கொண்டிருந்தேன். “திருப்பூரில் 30 முதல் 40 வயது வரையிலானவர்கள் அதிகம் வாசிக்க வருகிறார்கள். அரிவியல், வரலாறு, தன்னம்பிக்கை எதுவாவது .. குறைந்தது ஜோதிடத்தையாவது அவர்கள் வாசித்துவிடுகிறார்கள். ஆனால் பிரச்சனை இந்த மாணவர்களிடம்தான், பாடப்புத்தகங்களைக் கண்டு பயந்துபோன அவர்கள் காகித்தத்தில் அச்சிடப்பட்ட எழுத்துகள் மீது மிகுந்த அச்சம் கொண்டு ஓடுகிறார்கள்.”
பெண்கள்? .. பெரும்பாலும் சமயல் குறிப்புகளுக்கும், கோலப் புத்தகங்களும், நாவல்கள், எப்போதாவது ஆன்மீகம் மிகச்சிலரே அரசியல், தொழில் நுட்பம், வரலாறு .. என ஆர்வத்துடன் புத்தகம் தேடுகிறார்கள்.
-
ஆக .. மொத்த மக்களில் 50 சதம் பெண்களுக்கு புத்தக ஆர்வம் மிகக் குறைவு, 40 சதம் இளைஞர்களுக்கு புத்தக வெறுப்பு, சமூகத்தில் பொருப்பில் உள்ளவர்களுக்கு அக்கரையின்மை, 10 சதம் வரை குழந்தைகள் .... மொத்தம் 5 சதம்தான் புத்தக விரும்பிகள் ..
நாம் மட்டும் ஏன் புத்தக கண்காட்சிக்குச் செல்லவேண்டும்?
ஏனெனில் .. புதுகை பூபாளம் கலைக்குலுவினர் சொன்னதைப் போல .. “முழுமையான மனிதராக...”
தமிழிஷ் - நியூஸ் பானையில் ஓட்டளியுங்கள் .. 4 பேருக்கு தெரியட்டும் ...
ShareThis