கலவையான
அந்த நேரம்
ஆழ்ந்த மெளனம்
நாம் அறியாத போது
அடியாழத்தில்
ஊன்றிய வேர்கள்
துளித்துளியாய்
உயிரை உரிஞ்ச
துளிர் விட்டது நேசம்
கடற்பாறையில்
வந்து வந்து மோதும்
அலைகளாய்
எண்ணங்களால்
நிலைகுழையச் செய்தாய்
புரிந்தும் புரியாத
உணர்வின் பெயர்
காதலாகி நின்றது
இன்றும் அதே மெளனம்
சுற்றிலும் ஆயிரம் இறைச்சல்கள்
எழுந்தபோதும்
மனதைக் கவ்வி நிற்கும் மெளனம்
ஒரு பிடி மண்ணில்
எத்தனை துகள்கள்
உள்ளதோ அத்தனை முறை
உன்னை நினைக்கிறேன்
அலைகளின் மோதலில்
இன்று இதயம்
சுக்கு நூறாகியிருக்கிறது
யார் அணைபோட முடியும்?
முடிவற்றவை அலைகள்
இருப்போ, இல்லாமையோ ...
யார் நம்மை பிரித்துவிட முடியும் ?
முடிவற்றது நேசம் ...
ShareThis