உழைப்பை எவ்வாறு மதிப்பிடுவது?

சரக்குகள் சமுதாயப் பயன்பாட்டுக்காக படைக்கப்படுபவை. நாம் முந்தைய கட்டுரையில் ஒரு பண்டத்திற்கு இரண்டு மதிப்புகள் இருப்பதை பார்த்தோம். இதில் பரிவர்தனை மதிப்பே அந்தப் பொருளை சந்தைக்கு உரியதாக ஆக்குகிறது.


ரு பண்டத்திற்கு ஒன்றுக்கும் மேற்பட்டவர்களுடன் தொடர்பு இருக்க வேண்டும். ஒரு சட்டையை தையல் கலைஞர் அவருக்கே தைத்துக்கொண்டால், அது விற்பனை பண்டமாகாது முடியாது. பயன் மதிப்பு இருந்தாலும் பரிவர்தனை மதிப்பு இல்லாததால் அதில் செலுத்தப்படும் உழைப்பிற்கும் மதிப்பு இல்லை.
(பரிவர்தனை மதிப்பு என்பதை ஒரு பொருளின் விலை என்று சொன்னால் எளிதாகப் புரிபடும் என்றாலும், இதுவரை பணம் பற்றிய விளக்கத்தை நாம் பார்க்காததாலும்,  சில சிக்கலான பொருளாதாரக் காரணிகள் குறித்து ஆராயத் துவங்காததாலும், இன்னும் சில கட்டுரைகளுக்கு அப்படிச் சொல்வதை தவிர்க்கலாம்...)

மதிப்பு என்பது ஒரு பொருளில் உருக்கொண்டுள்ள உழைப்புதான் என்கிறபோது, அதனை எவ்வாறு அளவிடுவது? என்றால். உழைப்பை, அது நீடிக்கும் காலத்தைக் கொண்டே அளக்கிறோம். அப்படியானால் இங்கே இன்னொரு கேள்வி எழுகிறது. ”உழைப்பு அதிக நேரம் நீடிக்க வேண்டுமெனில் (!), திறமையான வேலைக் காரர்களைக் காட்டிலும் அதிக நேரம் உழைக்கும் திறமைக் குறைந்தவரின் உற்பத்தி பொருளின் மதிப்பு கூடுதலாக இருக்குமா?” அப்படி இல்லை. யதார்த்ததில் நேர்மாறானதே நடக்கிறது.

இப்போதும் ஒரு உதாரணத்தைப் பார்க்கலாம்...

துணி நெசவு, கைத்தறிகளில் நடந்தபோது ஒரு மீட்டர் காடா துணியின் மதிப்பு ரூ.20 ஆக இருந்தது எனக் கொள்வோம். அப்போது விசைத்தறி கண்டுபிடிக்கப்படுகிறது. அதன் மூலம் பாதியளவு உழைப்பு நேரத்தில் ஒரு மீட்டர் துணியை தயாரிக்க்க முடியும். எனவே, சிலர் அந்த இயந்திரத்தை வாங்குகிறார்கள். ஆனால் துணியின் மதிப்பு உடனே குறைவதில்லை. சராசரியான விலை அப்படியே இருக்கிறது.

இப்போது விசைத்தறியை வாங்கியவர்கள் குறைந்த செலவில் துணி தயாரித்து அதிக லாபம் அடைகிறார்கள். அதைப் பார்த்து மேலும் பலர் விசைத்தறிக்கு மாறுகிறார்கள். 1 விசைத்தறி: 99 கைத்தறி என்ற விகிதம் மாற மாற, (விசைத்தரிகள் எண்ணிக்கை அதிகரிக்கும்போது) சராசரி விலை மதிப்பு வீழ்ச்சியடைந்துகொண்டே வருகிறது. ஒரு கட்டத்தில் ஒரு மீட்டர் காடா துணியின் மதிப்பு ரூ.20/2 ஆக, அதாவது ரூ.10 ஆக குறைகிறது. இதற்கு காரணம் சராசரி உழைப்பு நேரத்தின் தேவை பாதியாகக் குறைவதுதான். இந்த நிலையில், அதிக நேரம் எடுக்கும் கைத்தறி நெசவாளருக்கு நட்டம்தான் ஏற்படுகிறது. அவர் நொடிந்துபோகிறார்.


மேற்கண்ட உதாரணம் சில வருடங்களுக்கு முன்னாள், நம்முன் நேர்ந்த நிகழ்வே. ஒரு விசைத்தறியில் மட்டும் உழைப்பு நேரம் பாதியாகக் குறைவதால் உடனே மதிப்பு வீழ்ச்சியடைவதில்லை.”உழைப்பு நேரத்தை ஒட்டுமொத்த சமூகம் ஒரு பொருளை படைக்க எடுக்கும் நேரத்தின் சராசரியாகக் கொள்கிறோம்” சராசரியில் ஏற்படும் மாற்றமே மதிப்பின் ஏற்றத்தையும் இறக்கத்தையும் தீர்மானிக்கிறது.

The total labour-power of society, which is embodied in the sum total of the values of all commodities produced by that society, counts here as one homogeneous mass of human labour-power, composed though it be of innumerable individual units. Each of these units is the same as any other, so far as it has the character of the average labour- power of society, and takes effect as such; that is, so far as it requires for producing a commodity, no more time than is needed on an average, no more than is socially necessary.

தனிமனிதர்களின் திறமையும், திறமைக் குறைவும் நேரம், பயிற்சியையும் கருவிகளையும் பொருத்து மாறுபடுகிறது. அவர்களின் உழைப்பின் அளவு உழைப்பு நேரத்தின் சராசரியைக் கொண்டே கணக்கிடப்படுகிறது. “ஒரே (சராசரி) உழைப்பு நேரத்தில் உற்பதி செய்யப்படும் சரக்குகள் ஒரே மதிப்பைப் பெற்றுள்ளன”.

உற்பத்தி திறனில்,

  • 1 உழைப்பாளரின் தேர்ச்சி (அ) தேர்ச்சியின்மை,
  • 2 தொழில் நுட்பம்
  • 3 சூழல்
  • 4 கூட்டு செயல்பாடு .. உள்ளிட்டவை மாற்றத்தை ஏற்படுத்துகின்றன.

எனவே, ஒரு பொருளின் மதிப்பை தீர்மானிக்கிற, (சராசரி) உழைப்பு குறித்து இனி வரும் பிரிவு 2 இல் ஆராய்வோம்.

(திருத்தப்பட்டது)
ShareThis