பிரிவு 2:
சரக்கில் உருக்கொண்டுள்ள
உழைப்பின் இரட்டைத்தன்மை
உழைப்புதான் பரிவர்த்தனை மதிப்பை உருவாக்குகிறது. அது குறித்த ஆய்வுக்குள் செல்வதற்கு முன்னால், ஒரு விசயத்தைப் பார்த்துவிடலாம்.
சில வருடங்களாகவே கணினி மென்பொருள் துறை உழைப்பாளர்களுக்கு சம்பளம் கொட்டிக் கொட்டி கொடுக்கப்பட்டது. உடனே அந்தத் துறையைத் தேர்ந்தெடுத்து படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கையும் பெருகியது. இப்போது அந்தத் துறைக்கு தேவையான தொழிலாளர்கள் எண்ணிக்கை உயர்ந்துள்ளதுடன், பொருளாதார நெருக்கடியின் காரணமாக வாய்ப்புகளும் குறைந்தன. இந்த இரண்டு காரணங்களால் மென்பொருள் சார்ந்த உழைப்பின் மதிப்பு கணிசமாகக் குறைந்துவிட்டது.
அதிலிருந்து, இன்றைய முதலாளித்துவ சமூகத்தில் மனித உழைப்பும் ஒரு பண்டமாக பார்க்கப்படுகிறது என்பது புரிபடும். நீங்கள் எவ்வளவுதான் திறமைக்காரராக இருந்தாலும் வேலைக்கு மேலும் 10 பேர் காத்திருக்கிறார்கள் என்றால், உங்கள் உழைப்பின் மதிப்பை முதலாளி தாராளமாகக் குறைத்துவிடுவார். ஒரு பொருள் தேவைக்கு அதிகமாக படைக்கப்படும்போது, அதன் சராசரி மதிப்பு குறைகிறது.
மனித உழைப்பையும் கூட ஒரு விற்பனைப் பண்டமாகவே கையாள்வதால் பண்டங்களின் இரண்டு காரணிகள் உழைப்பிற்கும் பொருந்தவேண்டும். ஒரு பண்டம் எப்படி பயன்பாட்டு இயல்பையும், பரிவர்தனை இயல்பையும் கொண்டிருக்கிறதோ, அது போலவே உழைப்பிற்கும் இந்த இரண்டு இயல்புகள் இருக்கின்றன. ஒன்று, உழைப்புதான் ஒரு மதிப்பின் படைப்பாளி என்ற அளவில் அது பல்வேறு வகைகளாக உள்ளது. மற்றொருபக்கம் உழைப்பிற்கு ஒரு (கூலி) மதிப்பு உள்ளது.
உழைப்பின் இந்த இரட்டை இயல்பை புரிந்துகொள்வதுதான் அரசியல் பொருளாதாரத்தின் அறிவிற்கு அச்சாணியாகத் திகழ்கிறது என்கிறார் மார்க்ஸ். (இதனை ஆராய்ந்து முதன்முதலில் சுட்டிக்காட்டியதும் அவரே)
பயனுள்ள உழைப்பு:
ஒரு சட்டை உருவாக்கத்தின் போது, முதலில் நூலில் இருந்து துணியை உருவாக்கும் நெசவாளரின் உழைப்பும் (நெசவு), அதன் பிறகு துணியை சட்டையாக தைக்க ஒரு தையல் கலைஞரின் உழைப்பும் (பிரதானமாகத்) தேவைப்படுகிறது. இவ்வாறு பயனுள்ள உழைப்பு தையல், நெசவு என பல்வேறு வகைகளாக உள்ளது. (ஆனால் எல்லா வகை உழைப்பிற்கும் சராசரி-மதிப்பு (கூலி) அது நீடிக்கும் காலத்தைக் கொண்டே தீர்மானிக்கப்படுகிறது) ஒரு தையல் தொழிலாளி தனது சட்டையை இன்னொரு சட்டைக்கே பரிவர்தனை செய்யப் போவதில்லை. எனவே, பல்வேறு பொருட்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. அது பரிவர்தனைக்கு மிக அவசியமாகும்.
பயனுள்ள உழைப்பு (வேலையின் தன்மை) <-- உழைப்பு --> அதன் மதிப்பு (வேலை நீடிக்கும் காலம்)
உழைப்பின் இந்த இரட்டை இயல்பை புரிந்துகொள்வதுதான் அரசியல் பொருளாதாரத்தின் அறிவிற்கு அச்சாணியாகத் திகழ்கிறது என்கிறார் மார்க்ஸ். (இதனை ஆராய்ந்து முதன்முதலில் சுட்டிக்காட்டியதும் அவரே)
பயனுள்ள உழைப்பு:
ஒரு சட்டை உருவாக்கத்தின் போது, முதலில் நூலில் இருந்து துணியை உருவாக்கும் நெசவாளரின் உழைப்பும் (நெசவு), அதன் பிறகு துணியை சட்டையாக தைக்க ஒரு தையல் கலைஞரின் உழைப்பும் (பிரதானமாகத்) தேவைப்படுகிறது. இவ்வாறு பயனுள்ள உழைப்பு தையல், நெசவு என பல்வேறு வகைகளாக உள்ளது. (ஆனால் எல்லா வகை உழைப்பிற்கும் சராசரி-மதிப்பு (கூலி) அது நீடிக்கும் காலத்தைக் கொண்டே தீர்மானிக்கப்படுகிறது) ஒரு தையல் தொழிலாளி தனது சட்டையை இன்னொரு சட்டைக்கே பரிவர்தனை செய்யப் போவதில்லை. எனவே, பல்வேறு பொருட்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. அது பரிவர்தனைக்கு மிக அவசியமாகும்.
To all the different varieties of values in use there correspond as many different kinds of useful labour, classified according to the order, genus, species, and variety to which they belong in the social division of labour. This division of labour is a necessary condition for the production of commodities, but it does not follow, conversely, that the production of commodities is a necessary condition for the division of labour. In the primitive Indian community there is social division of labour, without production of commodities.
எத்தனை விதமான ”பயன்-மதிப்புகள்” (அதாவது பயனுள்ள பொருட்கள் அல்லது சேவைகள்) இருக்கின்றனவோ, சமூதாய உழைப்பிலும் அத்தனை வகையான பிரிவுகளும் உள்ளன. உழைப்பின் இந்தப் பிரிவுகள் மிக இயல்பானவை. சரக்கு உற்பத்தியாளர்களினாலான இன்றைய சமூகத்தில் அது (உழைப்பு பிரிவினை) இன்றியமையாதது. ஒவ்வொரு உற்பத்தியாளரின் உழைப்புக்கும் இடையேயான பண்பு வழியிலான வேறுபாடு பின்னலாக - உழைப்பு பிரிவினையாக வளர்கிறது.
அதே சமயம், சரக்கு உற்பத்தி நடந்தால்தான் அங்கே உழைப்பு பிரிவினை இருக்கும் என்பதில்லை. புராதாண இந்திய கிராமத்தை எடுத்துக் கொண்டால் அங்கே பொருளாதாய சரக்கு உற்பத்தியும் பரிவர்தனையும் இல்லாமலே சாதி அடுக்குகள் நீடிக்கின்றன. ஒரு குடும்பத்திலும் உழைப்பு பிரிவினை இருக்கிறது, அங்கே சரக்கு பரிவர்தனை நடக்க வேண்டிய அவசியமில்லை.
ஒரு பண்டத்திலிருந்து உழைப்பை நீக்கிவிட்டால், அதன் கச்சாப்பொருட்கள் மிஞ்சுகின்றன. அந்தப் பொருட்களை இயற்கை நமக்கு வழங்குகிறது. இயற்கை வழங்கும் செல்வங்கள் அடிப்படை, அதே சமயம், உழைப்பு இல்லையெனில் மனிதன் அப்பொருட்களை பயன்படுத்தி ஆதயமடைய முடியாது. எனவே உழைப்பு மனிதனுக்கு இன்றியமையாததாகும். அதன் ஒவ்வொரு வகைகளும் நமக்கு தேவையான பல்வேறு பண்டங்களை நமக்கு வழங்குகின்றன. இயற்கை ஒரு பண்டத்திற்கு தாய் எனில் உழைப்பு அதன் தந்தை.
மதிப்பு:
இதுவரை நாம் ஒரு பண்டத்தின் பயன்-மதிப்பை உருவாக்குகிற பயனுள்ள உழைப்பு குறித்து பார்த்துவந்தோம். உழைப்புக்கு குறிப்பிடத்தக்க (பர்வர்தனை மதிப்பு) கூலியும் உள்ளது. இனி அதனை ஆராய்வோம்.
1 சட்டை = 2 மீட்டர் துணி
மேற்காணும் சமன்பாட்டில், சட்டை தன்னிலிருந்து வேறுபட்ட துணியுடன் சமப்படுவதற்கு அதன் பரிவர்தனை-மதிப்பே காரணம் என்பதை ஏற்கனவே பார்த்தோம். பரிவர்தனை-மதிப்பை காண பொருட்களின் இடையே உள்ள வேற்றுமைகளை முற்றிலும் நீக்கிட வேண்டும். அது சோப்பு டப்பாவா, சந்தனக் கட்டையா என்பதே இங்கு பிரச்சனை இல்லை. மதிப்பை மட்டுமே நாம் பார்க்கிறோம். அப்படியே உழைப்பின் பரிவர்தனை மதிப்பைக் காண்பதற்காக, உற்பத்தி நடவடிக்கையின் வேற்றுமைகளை நீக்கிவிடலாம். (இனியும் அது நெசவு, தையல், உழவு எனப் பார்க்கபடாது) இப்போது அவை அனைத்தும் செலவிடப்பட்ட மனித உழைப்பு சக்தியின் தெரிவிப்புகளேயன்றி வேறல்ல.
ஒரு தையல் தொழிலாளர் 2 மணி நேரம் எடுத்து ஒரு சட்டையை தைக்கிறார், அடுத்த நாள் அதே 2 மணி நேர உழைப்பை செலவிட்டு 2 சட்டைகளைத் தைக்கிறார் என்று கொள்ளுங்கள்.
1 சட்டை = 2 மணி நேர உழைப்பு
2 சட்டை = 2 மணி நேர உழைப்பு
3 சட்டைகளும் ஒரே பயன்-மதிப்புகளாக இருந்தபோதிலும். அவற்றுள் பொதிந்துள்ள உழைப்பின் மதிப்பு மாறுகிறது. சந்தைக்குச் செல்லும்போது அவற்றின் மதிப்பின் சராசரியே செல்லும். இதனால், முதல் சட்டையில் பொதிந்துள்ள 2 மணி நேர உழைப்பும் ஒட்டுமொத்த சராசரியாக குறைகிறது. மற்ற இரண்டு சட்டைகளில் புதந்துள்ள உழைப்பு 1 மணி நேரத்திற்கும் சறு கூடுதலாகிறது.
அதாவது, “பொருட் செல்வம் அதிகமாக படைக்கப்படும்போது மதிப்பின் பருமன் குறையலாம்” இதையே வேறு சொற்களில் சொன்னால் “உற்பத்தி அதிகரிக்கும்போது, பொருட்களில் அடங்கியுள்ள உழைப்பு ஒட்டுமொத்ததின் சராசரியாகக் கணக்கிடப்படுவதால் தனித்தனி மதிப்புகள் குறைகின்றன”.
சம காலத்தில் பிரயோகிக்கப்படும் உழைப்பு சக்திக்கு சமமான மதிப்பு உள்ளது. ஆனால் அது வேறுபட்ட உற்பத்தி திறனை கொண்டிருக்கும். உற்பத்தி திறனில் ஏற்படும் மாற்றம் ஒவ்வொரு தனிப் பொருளின் சராசரி மதிப்பை (விலை)யை சுறுக்கிவிடும்.
( திருத்தப்பட்டது)
ShareThis
